Search This Blog

Tuesday, June 15, 2010

ச்சே ச்சே ச்சே அசிங்க படுதிட்டான்களே

ஊருல எல்லோரும் வெளிநாட்டுக்கு போறங்களே , நமக்கு ஒரு சான்ஸ் கெடைக்குமா அப்படின்னு ஏக்க பட்டுகிட்டு இருக்கும் போது , நம்ம மேனேஜர் கிட்ட இருந்து ஒரு மெயில் வந்துச்சு , ராசா ஒரு ஆணி மாட்டிகிச்சு அது நீங்க போன தான் கழட்ட முடியும் அப்படின்னு .சரி நம்மளையும் நம்பி கூப்பிட்டாங்களே அப்படின்னு சந்தோசமா கெளம்பிட்டேன் .விமானம் பெங்களூர் நிலையத்தில் இருந்து கிளம்பி பிரான்க்போர்ட் சென்று பிறகு அங்கிருந்து டென்வர் செல்வதாக பயண சீட்டு பதிவு செய்ய பட்டு இருந்தது . பெங்களூர் விமான நிலையத்தில் வழி அனுப்ப வந்த என்னுடைய நண்பன் பலமுறை சொன்னான் , டேய் உலோகம் எதாவது உடலில் இருந்தால் அவர்களிடம் சொல்லிடு அப்படின்னு ,

நமக்கு முதல் முறை சர்வதேச விமானத்தில் போற மகிழ்ச்சியில அவன் சொன்னத பெரிசா எடுத்துக்குல , ஒரு வழியா எல்லா சோதனையும் முடிஞ்சு உள்ள போய் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு , அவங்கள் கொடுத்தத சாப்பிட்டு ஒரு லுக் விட்டுட்டு இருந்தேன்.பக்கத்துல ஒரு ஜேர்மன் பையனும் , கன்னட பொண்ணும் செம அட்டுழியம் வேற , ஒரு பெரு மூச்ச விட்டுட்டு நல்ல தூங்கிட்டேன் .பிரான்க்புர்ட் வந்து அடுத்த விமானம் பிடிக்க போகும் போது தான் என் வாழ்க்கையின் சோதனை கட்டம் ஆரம்பித்தது .

செக்யூரிட்டி செக் பண்ணும் போது மெட்டல் செக் பண்ணும் கருவி செம சத்தம் கொடுக்க ஆரம்பித்தது , என்னை சோதனை போட்ட ஜேர்மன்காரன் திரும்ப திரும்ப தேடினான் ஒன்றும் இல்லை .சந்தேகம் வலுத்து என்னை மிரட்ட தொடங்கினான் , எனக்கு தெரிந்து எந்த உலோகமும் இல்லை என்று சொன்னேன் .கடைசியில் தான் உறைத்தது என்னுடைய வெள்ளி அரைஞான் கொடியை நான் கழட்ட மறந்துவிட்டேன் என்று .உடனே தன்னுடைய கருவியில் கட்டளைகளை கொடுத்தான் , கண் மூடி திறப்பதற்குள் என்னைசுற்றி துப்பாக்கியுடன் காவலர்கள் .என்னை தனியாக கூட்டிபோய் சோதனை போட்டவன் , நான் எவ்வளோ சொல்லியும் என்னுடைய ஆயா ஆசை ஆசையாக வாங்கி போட்ட வெள்ளி அரைஞான் கொடியை பிடுங்கி அதை பலமுறை சோதனை போட்டான்.

அதைவிட கொடுமை அங்கு இருந்த மொத்த கூட்டமும் என்னை தீவிரவாதி ரேஞ்சுக்கு பார்த்தது ,ஒரு வழியா என்னுடைய அரைஞான் கொடியால அவங்க நாட்டுக்கு எந்த பாதுகாப்பு பிரச்னையும் இல்லை அப்படின்னு முடிவு பண்ணினவுடன் என்னுடைய பாஸ்போர்ட் திரும்ப கொடுக்க பட்டது.ஒரு வழியா கனத்த மனதோடு என்னுடைய டெர்மினல் கண்டுபிடித்து டென்வர் செல்லும் விமானம் ஏறினேன் .ஹ்ம்ம் அன்று கழட்டியதுதான் இன்று வரை தொடவே இல்லை.




Friday, December 4, 2009

வருக வருக

அன்புடன் ஆத்தூர் பையன் .